நல்ல படம் தேடும் நடிகை

1429587988-0636தமிழில் நடிகர் விக்ரமையும், நடிகை ரேவதியையும் பிடித்தமான நடிகர்கள் என்று கைகாட்டும் நித்யாமேனன். இவர் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் ’ஓ காதல் கண்மணி’, ‘காஞ்சனா-2’. ’ஒரு வருஷத்துல எத்தன படம் பண்றோன்கிறது முக்கியமில்ல.

என்ன மாதிரியான படங்கள் செஞ்சிருக்கேங்கறதுதான் எனக்கு முக்கியம். அதனால் கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். அப்படி முழுமனதோடு ஒப்புக் கொள்ளும் கதைகளில்தான், என்னை முழுமையாக ஒப்படைத்து உள்வாங்கிக்கொண்டு நடிக்க முடிகிறது.

அதே போல என்னை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் கற்றுக் கொள்கிறேன் என்பதைவிட.. நான் பார்க்கிற, கடந்து போகிற, எதிர்படுகிற எல்லோரிடமும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறேன். அதே போல கிளாமராக நடிக்கவேண்டுமென்கிற ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை.

’கிரியேட்டிவிட்’ டியான சினிமாவில் மட்டுமே இருக்க விரும்புகிறேன்’ என்கிறார். இவரைப்போல தமிழில் ஓரிருவராவது நடிக்கும் நடிகையாக இருக்கட்டுமே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online