இறுதிக்கட்டத்தை நெருங்கும் சூர்யாவின் ஹைக்கூ

75d3c7a0-964d-484e-b722-e778e2c0ee79_S_secvpfசூர்யா நடிப்பில் தற்போது ‘மாஸ்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மே 29-ந் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ என்ற படத்திலும் சூர்யா நடித்து வந்தார். குழந்தைகளை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதுகுறித்து, இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, ஹைக்கூ படத்தின் டப்பிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நாளை தொடங்கவிருக்கிறோம். ஒரேயொரு பாடல் மட்டும் இதில் பதிவு செய்யவிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் இன்னும் முடிவடையாமல் பாதியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries