லட்சுமி மேனனை காலேஜுக்கு அழைத்து சென்ற அஜித்

22a91206-3549-4c7c-b946-c78526cc8cbb_S_secvpf‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது அஜித்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றன.

இந்நிலையில், முதன்முதலாக இப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் லட்சுமி மேனனை அஜித் காலேஜுக்கு அழைத்து செல்லும் படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

லட்சுமிமேனன் சுடிதார் உடையில், கையில் ஒரு பையுடன் காலேஜூக்கு செல்லும் பெண் போல நிற்கிறார். அஜித் பச்சை நிற சட்டையும், வெள்ளை கலர் பேண்ட்டும் அணிந்து, கையில் ஒரு புத்தகத்துடன் நிற்கிறார்.

அஜித் நெற்றியில் திருநீறு அணிந்தும், தலைமுடியை தனது வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலிலும் வைத்துள்ளார். முகத்தில் தாடியை சவரம் செய்துள்ளார். மேலும், லேசான மீசையும் வைத்துள்ளார்.

அஜித்தின் இந்த ஸ்டைல் பெரும்பாலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் அஜித்தின் இந்த கெட்டப், பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. வேறு ஸ்டைலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries