அனைவரும் ருசிக்க மே 22-ந் தேதி வெளிவருகிறது கமரகட்டு

387d97a9-7347-4a99-8620-f2e5174109d9_S_secvpf‘சாட்டை’ படத்தின் நாயகன் யுவன் மற்றும் ‘பசங்க’ ஸ்ரீராம் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘கமரகட்டு’. இப்படத்தை ராம்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ரக்ஷாராஜ், மனிஷா ஜித் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

பிளஸ்-2 முடித்துவிட்டு காலேஜ் செல்லும் பருவ வயதில் இருக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படம் ஆரம்பத்தில் காதல் படமாகவும், இடைவேளைக்கு பிறகு அமானுஷ்ய சக்தி கொண்ட திகில் படமாகவும், இறுதியில் ஆன்மீக படமாகவும் முடியும் வகையில், தமிழ் சினிமாவுக்கு புதுவிதமான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணமாலை, தலக்கோணம் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர். ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் வழங்க ஸ்ரீதன்ஷா இன்னோபேஷன்ஸ் சார்பில் சந்திரமோகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், இப்படத்தை வருகிற மே 22-ந் தேதி வெளியிடவுள்ளனர். ஏற்கெனவே, மே 22-ந் தேதி ‘விந்தை’, ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’, ‘டிமான்ட்டி காலனி’ ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது 22-ந் தேதி அனைவரும் ருசிக்க வெளிவருகிறது ‘கமரகட்டு’.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online