விஜய் வசந்த் படத்தை வாங்கிய திருப்பதி பிரதர்ஸ்

4c62f681-4f03-47af-9be4-ad85228d926f_S_secvpf‘வழக்கு எண் 18/9’, ‘கோலிசோடா’, ‘மஞ்சப்பை’, ‘சதுரங்க வேட்டை’ ஆகிய தரமான படங்களை வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் வசந்த், சானியா தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜிகினா’ படத்தையும் வாங்கி வெளியிடவுள்ளது.

இப்படத்தை ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வாங்கி வெளியிடுவது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி கூறும்போது, படம் தொடங்கும் முன்பே ரவி நந்தா பெரியசாமியின் கதையின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. படத்தை பார்த்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.

இப்படம் ரவிநந்தா பெரியசாமிக்கு மட்டுமல்ல திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் மேலும் நற்பெயரை சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக, கமல் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாகியுள்ளது. இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online