செல்வராகவன்-சிம்பு இணையும் புதுப்பட டைட்டில்?

eb4e2596-2e22-4688-a66c-5be984492971_S_secvpf‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு செல்வராகவன், சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க விருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் திரிஷா ஒப்பந்தமாகியிருந்தார்.

பிறகு, திரிஷா, இப்படத்திலிருந்து விலகவே, தற்போது அவருக்கு பதிலாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், டாப்சியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே சமீபத்தில் இப்படத்திற்காக பூஜை போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘கானகம்’ என்று பெயர் வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ‘காதல்கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ போன்ற செல்வராகவனின் காதல் படங்கள் வரிசையில் இந்த படம் காதல் பின்னணியில் உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online