ரகசிய திருமணமா?: நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்பு

Vignesh-Shivan-and-Nayantharaதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, வளர்ந்து வரும் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இன்று காலை முதலே மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளிவந்தன.

இருவரும் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால், இவர்களுடைய திருமணம் கேரள மாநிலம் கொச்சியில், கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றதாகவும், திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது.

ஏற்கெனவே, இவர்கள் இருவரும் ரகசியமாக காதல் செய்து வருவதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத இருவரும், தற்போது ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு, உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, நான் திருமணம் செய்துகொண்டதாக வெளிவந்த செய்தி உண்மை கிடையாது. இதுபோன்ற தவறான செய்திகள் எங்கள் வேலையை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் எங்களை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

நயன்தாராவும் இதுகுறித்து கூறும்போது, எனக்கு திருமணம் ஆனதாக வெளிவந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பெரிய விஷயம். அது எனக்கு நடக்கும்போது கண்டிப்பாக எல்லோருக்கும் சொல்வேன். ஒளிந்துகொண்டு திருமணம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இருவரும் காதலை வளர்த்து வருவதாக ஒரு செய்தியும் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருவது குறிப்படத்தக்கது

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online