நடுஇரவில் வெளியாகும் கமல் பாடல்

c2ff45e3-a58a-49b9-bb0f-724c43b77c55_S_secvpfகௌரவ், கார்த்தி, வில்வா கிரிஷ், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் ‘அவம்’. இப்படத்தை விஜய் வில்வா கிரிஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக கமல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

‘காரிருளே’ எனத் தொடங்கும் அந்த பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடல் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இந்த பாடலுக்கு அழகாக மெட்டமைத்துள்ளார். மேலும், இந்த பாடல் தற்போதைய காலகட்டத்தின் காதல் இழப்பையும், அதனால் ஏற்படும் வலியையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கமல்ஹாசன் குரலை இதுவரையில் கேட்டிராத வகையில் புதுமையாக அமைந்துள்ள இப்பாடலை இன்று நடுஇரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். இந்த பாடல் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries