நீண்ட தாடி தலைமுடியுடன் பரத் நடிக்கும் லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி

1432030902-4904பத்து வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் பரத்துக்கு மலையாளத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மோகன்லாலுடன் நடிக்க. படம், கூதறா. பார்க்க முடியாது என்பார்களே. அப்படியொரு படம். அட்டர் ப்ளாப்.

ஆனால், பரத் என்ற நடிகனை மலையாள சினிமா மீண்டும் அப்படம் மூலம் நினைவுப்படுத்திக் கொண்டது. புதிய பட வாய்ப்பும் பரத்துக்கு கிடைத்தது. அதுதான் இந்த செய்தியின் தலைப்பில் நீங்கள் படித்தது.

நார்த் 24 காதம், ஷப்தமஸ்ரீ தஸ்கரஹா படங்களை இயக்கிய அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார். நீண்டை தாடி தலைமுடி என்று பரத்துக்கு வித்தியாசமான கெட்டப்.

சென்னையிலிருந்து கேரளா வருவதாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் படத்தில் தமிழிலேயே பேசுகிறார் பரத்.

இந்தப் படத்தில் பரத்தின் கதாபாத்திரப் பெயர், சாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries