நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் – திட்டமிட்ட விளம்பர ஸ்டண்ட்

1432026111-4052நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர் என மீடியாக்கள் அலறிக் கொண்டிருந்த நேரம், சம்பந்தப்பட்ட இருவரும் மௌனமாக இருந்தனர்.

சில முந்திக்கொட்டைகள், இவர்களின் தேனிலவுக்கு நாள் குறித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு விஷயம் முற்றிப் போன பிறகே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மௌனம் கலைத்தனர். இந்த இடைப்பட்ட சில நாள்களில், நானும் ரவுடிதான் படத்துக்கு கிடைத்த இலவச விளம்பரத்தின் மதிப்பு பலகோடிகள் இருக்கும்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும், நானும் ரவுடிதான் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு அவர்களாகவே திட்டமிட்டு பரப்பியதுதான் இந்த திருமண ஐடியா என கோடம்பாக்கம் நம்புகிறது. அதற்கேற்பதான் இருந்தன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரின் செயல்பாடுகள்.

ராஜா ராணி படத்தின் போது நயன்தாராவும், ஆர்யாவும் திருமணம் செய்து கொண்டதுபோல் அழைப்பிதழ் அடித்து ஊரை ஏமாற்றினர். இப்போது திட்டமிட்ட திருமண வதந்தி.

இப்படியே போனால்; நயன்தாராவுக்கு உண்மையாகவே திருமணம் நடக்கும்போது, அதனை விளம்பர ஸ்டண்ட் என்று மீடியாவும், மக்களும் புறக்கணித்துவிடப் போகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries