விஜய் இயக்கத்தில் பிரபுதேவா?

35fa66ac-8e84-479a-89e9-a55bf2573b4d_S_secvpfஇயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த விஜய் அவரிடம் ஒரு கதையை கூறியுள்ளார். அதைக் கேட்ட பிரபுதேவா அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இந்த கதை சம்பந்தமாக இதுவரை 3 முறை பிரபுதேவாவிடம் விஜய் விவாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா தமிழில் நடித்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘தோனி’. பிரகாஷ்ராஜ் இயக்கி, நடித்திருந்த இந்த படத்தில் பிரபுதேவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ படமும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online