கார்த்திக் சுப்புராஜின் இறைவி படப்பிடிப்பு தொடங்கியது

369d09af-a468-4742-95d4-24e704858574_S_secvpf‘அட்டகத்தி’, ‘பிட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘வில்லா (பிட்சா 2)’, ‘முண்டாசுப்பட்டி‘, ‘சரபம்‘, ‘எனக்குள் ஒருவன்‘ உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் ‘இறைவி’ என்னும் படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தை பிட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். முதன்முறையாக விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஷிவா விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online