ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கும் ஹன்சிகா

19d5dce5-af8e-4f34-a3c2-3bebda2225e0_S_secvpfதற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது உள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் ஹன்சிகாவின் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் ‘அரண்மனை’, ‘மீகாமன்’, ‘ஆம்பள’ ஆகிய 3 படங்கள் வெளியானது.

இப்படங்கள் ஹிட்டானதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஹன்சிகாவிற்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இவரது நடிப்பில் ‘வாலு’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘உயிரே உயிரே’, ‘புலி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் விஜய்யுடன் நடித்துள்ள ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.

சிம்புடன் நடித்த ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. அதாவது ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. சிம்புவுடன் நடித்த ‘வாலு’ படம் நீண்ட காலமாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதிகள் தள்ளி போய் கடைசியாக ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக கூறியுள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவதால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இது இவருக்கு மட்டுமல்லாது ஹன்சிகா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries