பணமும் இல்ல, ட்யூனும் இல்ல – பஞ்சாயத்துக்கு வந்த சிம்பு, நயன்தாரா படம்

1402486201-9623டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கும் படம், இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தை பாண்டிராஜ் முதல் காப்பி அடிப்படையில் தயாரிப்பதாக கூறப்பட்டது.

வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு டிமிக்கிதர, ஹைக்கூ படத்தை இயக்கப் போய்விட்டார் பாண்டிராஜ். அவ்வப்போது இது நம்ம ஆளு படப்பிடிப்பை நடத்தி இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்துள்ளார். இன்னும் சில காட்சிகள், பாடல் பாக்கி உள்ளது.

இந்நிலையில், இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் முடித்து தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் தந்தார். இது குறித்து கேட்டதற்கு, பாண்டிராஜிடமிருந்து கூலாக வந்தது பதில்.

“இது நம்ம ஆளு படத்துக்கு தேவையான முக்கிய பாடலை குறளரசனும் படப்படிப்புக்கு தேவையான பணத்தை டி.ராஜேந்திரும் தயாராக வைத்து இருந்தால் ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

என்ன டிஆர் சார். டீலா நோ டீலா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries