தமிழ் மொழி மேல் உனக்கு ஏன் இந்த கொலவெறி டா?: தனுஷுக்கு பதிலடி கொடுத்த இலங்கை தமிழரின் பாடல்

78a1c991-d953-4b22-b82b-4088450276a4_S_secvpfதனுஷ் நடிப்பில் உருவான ‘3’ திரைப்படத்தில் இடம்பிடித்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கும் பெருத்த வரவேற்பை பெற்றது. என்ன தான் வரவேற்பை பெற்றாலும் நமது தாய்மொழியை இழிவு படுத்தும் விதமாக இப்பாடல் உள்ளதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு போட்டியாகவும், மேன்மை பொருந்திய தமிழ் மொழியின் சிறப்புகள் விளக்கும் வகையிலும் இலங்கை தமிழர் ஒருவர் பாட்டு பாடியுள்ளார்.

அதில் என் தமிழ் மொழி மேல் உனக்கு ஏன் இந்த கொலவெறி டா? என் தமிழ் செம்மொழி தாய்மொழி பாவமடா…கல் தோன்றி மண் தோன்றா முன் வந்த தமிழ் மொழிடா…நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா… என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

செம்மொழியான தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம் என்று நீளும் அந்த பாடலில் தமிழின் மேன்மை பற்றி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனுஷுக்கு தனது எதிர்ப்பை அந்த இலங்கை தமிழர் பதிவு செய்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries