அஜித்தின் 56–வது படம் பாட்ஷா பட ரீமேக்?

bd8d0f8c-ec25-4e65-9de4-12dfd47a29a4_S_secvpf‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘வீரம்’ படம் வந்து வெற்றிகரமாக ஓடியது. மீண்டும் புதுப்படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படம் அஜீத்துக்கு 56 வது படம் ஆகும். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் கதையும் அஜித் கேரக்டரையும் ரகசியமாக வைத்து இருந்தனர். ஆனால் இணையதளங்களில் கதை குறித்து செய்திகள் தற்போது பரவி வருகிறது.

ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றும் ரஜினி தங்கையாக நடித்த யுவராணி கேரக்டரில் லட்சுமிமேனன் நடிக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன. அஜித்தும் ரஜினியை போல் ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online