மீண்டும் சைக்கோ கில்லராக மாறிய கமல்?

ca4b1aa6-fdd4-49f8-9a51-378972a64f18_S_secvpfகமல் தனது உதவியாளர் ராஜேஷ் செல்வம் இயக்கத்தில் ‘தூங்காவனம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், மனிஷா கொய்ராலா, அனைகா ஷோதி, உமா ரியாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. ஒரு போஸ்டரில் கமல் ரொம்புவும் இளமையாகவும், முகத்தில் தாடி, கையில் ஒரு துப்பாக்கி, இடுப்பில் ஒரு துப்பாக்கியை சொருகிக்கொண்டு வருவதுபோன்றும் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்டரில் ஒரு பெண்ணை ஒரு கையால் கட்டிப்பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுடுவதுபோன்றும் வடிவமைத்துள்ளனர்.

இந்த போஸ்டர்களை வைத்து பார்க்கும்போது, இந்த படத்தில் கமல் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் இடம்பெற்ற சைக்கோ கில்லர் மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த படத்தில் கமல் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online