விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும் புலி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்தைப் போலவே இந்த படமும் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர் படப்பிடிப்பில் இருந்து சற்று ஓய்வு கிடைக்கவே, இயக்குனர் சுசீந்திரன், விஷால், சூரி, வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்தது தனது புது உற்சாகத்தை கொடுத்துள்ளதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.