மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

330e2b87-433d-4fc4-b269-07d499b92c62_S_secvpf‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இவர்களும் இருவரும் இணையவிருக்கும் இந்த புதிய படத்திற்கு ‘வடசென்னை’ என பெயரிட்டிருக்கின்றனர். இந்த செய்தியை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இப்போது விஜபி-2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கவிருக்கிறேன். இப்படத்தில் எனக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.

பொல்லாதவன் படப்பிடிப்பின்போதே இந்த கதையை வெற்றிமாறன் சொல்லியிருந்தார். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். 2016-ல் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தனுஷ் விஐபி-2 படத்தில் பிசியாக இருப்பதால் சிம்புவை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் அடிபட்டன.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் தொடங்கும் படத்துக்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டிருப்பது, இவர் ‘வடசென்னை’ படத்தில் ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online