கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரே இந்திய படம்

764eceba-3303-47d6-acec-5bb9a312e8fa_S_secvpfஉலக அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக எல்லோராலும் கொண்டாடப்படும் விருது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விருது. இந்த விருது விழாவில் இந்திய திரைப்படமான ‘மாஸான்’ என்ற இந்தி படம் விமர்சர்கள் விருது பெற்றுள்ளது.

68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ஒரே இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தை நீரஜ் கெய்வான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் இதுவாகும்.

தனது முதல் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது குறித்து நீரஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதைக்களமாக கொண்டு உருவான இப்படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online