அஜித் படத்துக்கு கோடை விடுமுறை

ajith-kumar‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கப்பட்டது. அங்கு பிரம்மாண்டமான செட் அமைத்தும் பின்னர் நாவலூர் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் படமாக்கி வந்தார்கள். இதில் அஜித், லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை சிறுத்தை சிவா படமாக்கினார். இதில் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியது.

தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சிறிது இடைவேளை கொடுத்துள்ளனர். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறார்கள். சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலேயே படத்திற்கு இந்த இடைவெளி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தை ரசிகர்கள் ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries