ராம் இயக்கத்தில் மீண்டும் ஆண்ட்ரியா-அஞ்சலி?

anjali_andrea_ram_Tஇயக்குனர் ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘தங்க மீன்கள்’. இப்படம் பல தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ‘தரமணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா-வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டியை வைத்து பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளை தேர்வு செய்து வந்தார். இந்நிலையில், இப்படத்தில் ஆண்ட்ரியா அல்லது அஞ்சலி இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கதை திருநங்கை மீது ஒருவன் காதல் கொள்வதுபோன்ற கசப்பான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online