சூர்யா படத்துக்கு பாடல் ரெடி

Surya Latest Stills014சூர்யா நடிப்பில் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் வருகிற 29-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தற்போது இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் சூர்யா பிசியாக இருக்கிறார். இதுதவிர, விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘24’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ‘மாஸ்’ பட வெளியீட்டுக்காக விக்ரம்குமார் படத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

‘24’ படம் முழுக்க முழுக்க மும்பையிலேயே படமாக்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் தற்போது முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பாடலை முழுக்க முழுக்க மும்பையிலேயே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கவுள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு பாலிவுட் கேமராமேன் கிரண் தியோஹன்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மும்பையில் முக்கியமான இடங்களை இவரது கேமரா மூலம் அழகாக பதிவு செய்திருக்கிறராம். இப்படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக விஷுவல் விருந்தாக இருக்கும் என கூறுகின்றனர். மும்பை மாநகரத்தை வித்தியாசமான கோணங்களிலும், வித்தியாசமான ஒளியாலும் அழகாக படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

‘24’ படம் ரொம்பவும் ஸ்டைலிஷாக உருவாகி வருகிறது. பாக்ஸ் ஆபிசில் இது சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது. இப்படத்தில் சமந்தா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online