துடி – 12 மணிநேர தீவிரவாத தாக்குதல்

1432972214-2517மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா ஒரு படத்தை எடுத்தார். அதேபோல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலை சொல்லும் படம், துடி.

ரிதுன் சாகர் என்பவர் இந்தப் படத்தை தயாரித்து, இயக்குகிறார். காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை அந்த ஹோட்டலில் நடைபெறும் சம்பவங்கள் – தாக்குதல்தான் படத்தின் கதை.

இதில் நாடோடிகள் படத்தில் அறிமுகமான அபிநயா ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுமன், பிரம்மானந்தம், நளினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

பெரும்பாலான காட்சிகள் பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற அரங்கில் எடுக்கப்பட உள்ளன. அது தவிர சென்னை, ஹைதராபாத், மூணார் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online