அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அஸ்வின்

0b59d75a-7c22-4c7e-92a8-bc6c2f251d21_S_secvpfஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித், லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை சிறுத்தை சிவா படமாக்கினார். தற்போது படப்பிடிப்பு விடுமுறை அளித்துள்ள படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளனர். இதில் அஜித், சுருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இவர்களுடன் அஸ்வினும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் அஜித்துடன் இணைந்து நடிப்பது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் இணைந்து அஸ்வின் நடித்திருந்தார்.

இதில் அஸ்வின் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அஸ்வினின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ஏழாம் அறிவு’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மேகா’ ஆகிய படங்களில் நடித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online