சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இவரது நடிப்பில் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையிலும் ஒரு சில காரணங்களால் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது.
இதுதவிர, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நல்ல செய்தி வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ள சிம்பு,. ‘வாலு’ படத்தின் டிரைலருக்கு முன்னதாகவே படத்தின் ரிலீஸ் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்தி மற்றும் புதியதாக நடிக்க இருக்கும் படத்தின் தகவல்களையும் விரைவில் கூறுகிறேன் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.