அட்லி படத்தில் அப்பாவாக நடிக்கும் விஜய்?

21120ba2-1e6c-4885-ba59-caa35067cc6a_S_secvpfவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்தி படத்திற்கு இந்த படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ஒரு வேடமாக காக்கி யூனிபார்ம் அணிந்து போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மற்றொரு வேடத்தை ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது, மற்றொரு வேடம் என்னவென்பதும் வெளியாகியுள்ளது.

அதாவது, விஜய் இதில் அப்பா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதன்முறையாக ஒரு படம் முழுவதும் விஜய் அப்பா வேடமேற்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் நடுவில் தொடங்கவிருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online