தல 56 படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய அஜித்

hqdefaultஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘தல 56’ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவெளியில் அஜித், தனது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

அஜித் ஒரு சிறந்த கார் பந்தய வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல், சிறந்த பைக் ரைடரும் கூட. விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், நேரம் கிடைக்கும்போதேல்லாம் தனக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தல 56 படக்குழுவினருடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. ‘தல 56’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

“இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்” 1 1

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries