நயன்தாரா துணிச்சலானவர்: இஷா தல்வார்

28f686fa-1001-4b5a-aeb6-a19206c3c8e3_S_secvpfரஜினியின் ‘தில்லு முல்லு’ பட ரீமேக்கில் சிவா ஜோடியாக நடித்தவர் இஷா தல்வார். தற்போது மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

மம்முட்டி நாயகனாக நடித்து சமீபத்தில் ரிலீசான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் நயன்தாராவும் இஷா தல்வரும் இணைந்து நடித்தனர். நயன்தாராவுடன் நடித்தது பற்றி இஷா தல்வார் கூறும்போது, நயன்தாராவை நிறைய விஷயங்களில் எனக்கு பிடிக்கும். அவர் மிகவும் அழகானவர். துணிச் சலானவராகவும் இருக்கிறார்.

அதே நேரம் பணிவாகவும் நடந்து கொள்கிறார். எல்லோருக்கும் அவரை ரொம்ப பிடிக்கிறது. ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் அவரோடு நடித்தேன்.

அது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நான் சைவ உணவுகளையே சாப்பிடுகிறேன். அசைவத்தை தொடுவதே இல்லை. சைவ உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online