இயக்குனரை கலாய்த்த ஆர்யா

192c3969-5a01-4130-a5ae-fcfa4f5cba84_S_secvpfஆர்யா தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

ராஜேஷ் படத்தில் வழக்கமாக காமெடி மற்றும் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்தானம், இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர் விஷாலும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று இப்படத்தின் டப்பிங்கில் கலந்துகொண்ட ஆர்யா, ராஜேஷ் தன்னிடம் மாடுலேஷன் மாடுலேஷன்னு சொல்லி சாவடிக்கிறான் என்று அவரை கலாய்த்துள்ளார்.

ராஜேஷ் தன்னுடைய வழக்கமான காமெடி பார்முலாவையே இப்படத்திலும் பயன்படுத்தி எடுத்திருக்கிறார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்திற்கு ராஜேஷ்-ஆர்யா இணைந்திருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த வருடத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries