ஜுன் 12 ஹீரோ சந்தானம் ரிலீசாகிறார்

1431677572-165இனிமே இப்படிதான் என்று பெயர் வைத்தபோதே குறிப்பிட்டோம். இனிமே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதைத்தான் சந்தானம் இந்தப்படப் பெயரின் மூலம் சிம்பாலிக்காக சொல்கிறார் என்று. அதுதான் நடந்தது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பக்கா பிளாப்பிற்குப் பிறகு சந்தானம் ஹீரோவாகியிருக்கும் படம், இனிமே இப்படிதான். இந்தப் படத்துக்குப் பிறகு காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன், நட்புக்காக மட்டும் எப்போதாவது நடிப்பேன்.

மற்றபடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் அறிவித்தார்.

சந்தானத்துடன் ஆஷ்னா சரி, அகிலா கிஷோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரஹ்மானின் உதவியாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி ஜுன் 12 திரைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online