படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த ப்ரியா ஆனந்த்

de0df9a9-2d27-46e6-be3b-d3d274375dff_S_secvpfஅஜித் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது வழக்கம். படப்பிடிப்பு இறுதிநாளில் பந்தல் போட்டு துணை நடிகர், நடிகைகள், லைட்மேன்கள், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவு, உதவியாளர்கள், டிரைவர்கள், ஸ்டண்ட் நடிகர்கள், நடன குழுவினர் உள்ளிட்ட எல்லோருக்கும் தன் கைப்பட பரிமாறி பிரியாணி விருந்து அளிப்பார்.

விஜய்யும் பண்டிகை நாட்களில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது உண்டு. தற்போது நடிகை ப்ரியா ஆனந்த்தும் இந்த அணியில் சேர்ந்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதில் கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்ததும் தனது செலவிலேயே படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து பரிமாறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries