கயல் ஜோடியுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபு சாலமன்

Kayal_Movie239பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இமான் இசையமைத்திருந்தார்.

காதல் கதையாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. குறிப்பாக சந்திரன், ஆனந்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

தற்போது இந்த ஜோடி புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இப்புதிய படத்தை ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார். இந்த படத்தை பிரபு சாலமன் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படம் குறித்த முழுவிவரம் விரைவில் வெளியிடவுள்ளனர்.

அன்பழகன் ஏற்கனவே இயக்கிய ‘சாட்டை’ படத்தை பிரபு சாலமன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries