ரஜினிக்கு முன்னுரிமை கொடுத்த பாகுபலி படக்குழுவினர்

a65d0fe3-6dfe-4323-a54b-c1c74cc0094a_S_secvpfதமிழில் ‘நான் ஈ’ படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பாகுபலி’. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பாகுபலி படத்தை முதலில் யாருக்கு திரையிட்டு காட்ட விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அனுஷ்கா கூறும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் இந்த படத்தை முதலில் காட்ட விரும்புகிறேன் என்று கூறினார். இதே கேள்வியை பிரபாஸிடமும் கேட்டபோது, அவரும் ரஜினிகாந்த் பெயரையே பரிந்துரைந்தார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போதே இப்படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது. உலகமே வியந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இந்த வருடத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online