சிம்புவை தொடரும் சோகம்

1ea61aa6-1e0b-4c8b-aeac-043df1e30bff_S_secvpfசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் முடிவடைந்தும் இன்னும் ரிலீசாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து அவசர பத்திரிகையாளர் சந்திப்புக்கு சிம்பு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வாலு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, மேலும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் அவர் தெரிவிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

தனது படம் சம்பந்தமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புதான் கடந்த இரண்டு நாட்களாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் நடக்கவிருந்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சிம்புவின் பட வெளியீடு தள்ளிக்கொண்டே போவதுபோல், இவரது பத்திரிகையாளர் சந்திப்பும் தள்ளிக்கொண்டே போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

சிம்பு, மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் தேதி அறிவிக்கப்படாமலேயே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries