அஜீத் படத்தை இயக்குகிறேன் என்பது வதந்திதான் – விஷ்ணுவர்தன்

1432706815-5457சிவா இயக்கத்தில் நடித்துவரும் அஜீத், அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனை அழைத்து அவர் தந்திருக்கும் மூன்றாவது வாய்ப்பு இது என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனல், இது உண்மையில்லை என்று பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விஷ்ணுவர்தன் தெளிவுப்படுத்தினார்.

பில்லா, ஆரம்பம் இரண்டுமே அஜீத் என்னை அழைத்து அளித்த வாய்ப்புகள். இப்போதும் அப்படியொரு வாய்ப்பை தந்தால் அவருக்காக ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்ய தயாராக இருக்கிறேன். அவரது அடுத்தப் படத்தை நான் இயக்குவதாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.

விஷ்ணுவர்தன் தற்போது ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் யட்சன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா அஜீத் ரசிகராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries