கூலாக படத்தை தொடங்கும் ஜெயம் ரவி

676488a2-2e0a-461c-997e-ca5968661704_S_secvpfஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘நிமிர்ந்து நில்’ படம் வெளியானது. இப்படத்தையடுத்து ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘அப்பாடக்கரு’ ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இதில் ‘ரோமியோ ஜூலியட்’ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பூலோகம்’ நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இவர் அடுத்ததாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குளு குளுப்பான ஊட்டியில் தொடங்க இருக்கிறது. ஊட்டியில் உள்ள மலைப் பகுதிகள் படத்தில் முக்கிய இடம் பெறும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online