எழில் இயக்கத்தில் விஷ்ணு

a2f97732-f4f3-4199-8592-3298799a5da0_S_secvpfஎழில் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘வெள்ளக்காரத்துரை’. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு நடிக்கவிருக்கிறார்.

விஷ்ணுவுக்கு கடைசியாக வெளிவந்த ‘ஜீவா’ படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. இருப்பினும், விஷ்ணுவுக்கு படவாய்ப்புகள் குறையவில்லை.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘இடம் பொருள் ஏவல்’, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

மேலும், கண்ணன் இயக்கத்தில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ என்ற படத்திலும், ஷங்கர்தயாள் இயக்கும் ‘வீரதீரசூரன்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், எழில் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சி அல்லது கீர்த்தி சுரேஷ் இருவரில் ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries