கவர்ச்சியான அழைப்பிதழை உருவாக்கிய ஜோதி லட்சுமி படக்குழுவினர்

7817b2a9-88eb-4b23-9d62-183461ecc422_S_secvpfசினிமா படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஏதாவது வித்தியாசம் ஒன்றை காண்பித்து ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை கவர ஆர்வம் காண்பிப்பார்கள்.

சிலர் தலைப்பில் வித்தியாசம், படத்தில் வித்தியாசம் என புதுப்புது முயற்சி எடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஆடியோ வெளியீட்டு அழைப்பிதழில் அதிகம் வித்தியாசம் காண்பிப்பார்கள்.

அந்த வரிசையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சார்மி ‘ஜோதி லட்சுமி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் விபசார அழகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இது ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு அழைப்பிதழை வித்தியாசமாக பெண்ணின் மேலாடையை கலட்டுவது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries