ஜீவா ரவுடியாக நடிக்கும் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல்

e0018c4f-797b-4067-a447-8d701a9b7657_S_secvpf‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார். ரவுடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்திக் கொண்டதுடன் உடற்பயிற்சி செய்து ஜீவா, தற்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரவுடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்குள் நிஜமாகவே அப்பகுதியில் சண்டை நடந்தது. இப்படக்காட்சியோடு நிஜ ரவுடிகளின் சண்டையையும் படக்குழுவினர் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.

‘ஈ’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஸ்ரீ இசையமைத்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online