ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் சாங் லீன் கைவண்ணத்தில் மிரட்டும் புலி கிளைமாக்ஸ்

peprltdggjdgi_smallபுலி படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இதுவரை தமிழ் சினிமா கண்டிராதவகையில் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டும் 84 நாள்கள் எடுத்துக் கொண்டதாக ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் தெரிவித்தார்.

புலியின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை, விஜய் பல நூறு பேருடன் மோதுவதாக அமைத்துள்ளார்கள். இந்த சண்டைக் காட்சியில் சூப்பர் சுப்பராயனுடன் ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைக்கும் சாங் லீனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.

விஜய் படங்களில் மட்டுமின்றி தமிழ்ப் படங்களிலேயே இப்படியொரு சண்டைக் காட்சியை பார்க்க முடியாது என்கிறார்கள்.

இந்த மாதம் 22 -ஆம் தேதி புலியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online