திருவனந்தபுரத்தில் நடிகை நஸ்ரியாவின் கார், மற்றொரு கார் மீது மோதல்: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

b9cf6929-787d-419d-912d-4262ef93cb56_S_secvpfமலையாள திரையுலகில் முன்னணி நடிகை நஸ்ரியா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருவனந்தபுரத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். நஸ்ரியா நேற்று முன்தினம் மாலையில் பாப்பனம் ரோட்டில் இருந்து திருவனந்தபுரம் தம்பானூர் நோக்கி தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது இவரது கார் மற்றொரு கார் மீது மோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே நஸ்ரியா காரில் இருந்து இறங்கி தனது கார் மோதிய மற்றொரு கார் டிரைவருடன் நடுரோட்டில் சமரசத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் சமரச பேச்சு நடைபெற்றது.

நடுரோட்டில் நடிகையை கண்ட வாகனங்களில் வந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறுவதாக நினைத்து ரசித்து பார்த்தனர்.

ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்னர்தான் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும், நடிகையின் கார் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

அதற்குள் சமரசம் ஏற்பட்டதால் நஸ்ரியா காரை எடுத்து சென்றார். பின்னர் போக்குவரத்தும் சீரானது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries