திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தவறல்ல: நித்யாமேனன்

d40873da-91b6-48b9-be61-4caa6d2c0b04_S_secvpfமணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வந்த ஓ காதல் கண்மணி படம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே அறையில் சேர்ந்து வாழும் இளம் ஜோடியை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இருந்தது. இளம் ஜோடியாக துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்து இருந்தனர்.

இந்த கதை சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு ஆதரவான கருத்துகளும் எதிரான கருத்துக்களும் வெளிவந்தன. தற்போது நித்யாமேனனும் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும் போது,

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறல்ல. இளம் தலைமுறையினருக்கு இப்பிரச்சினையில் சொந்தமாக முடிவு எடுக்க சுதந்திரம் அளிக்க வேண்டும். காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்க வேண்டும். பெற்றோரும் இத்தகு முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரை பற்றி ஒருவர் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொள்வதால் பிரச்சினைகள் வரலாம்.

ஒருவர் குணம் மற்றவருக்கு பிடிக்காமல் பிரியவும் நேரலாம். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதன் மூலம் இந்த குறைகள் தவிர்க்கப்படும். திருமணத்துக்கு முன் ஒருவரை பற்றி ஒருவர் முழுமையாக அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த உறவில் குழந்தை பிறந்தால் பிரச்சினைகள் வரும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries