பேய் தான் இப்போது சூப்பர் ஸ்டார்: நடிகர் சந்தானம் பேட்டி

893a96ca-ba9b-4f3a-a46f-5df2cbf81634_S_secvpfநடிகர் சந்தானம் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் “இனிமே இப்படித்தான்” என்ற புதிய படம் வருகிற 12-ந்தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி, நடிகர் சந்தானம் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இனிமே இப்படித்தான் படம் எனது சொந்தபடம். ‘இனிமே இப்படித்தான்’ என்றால் அது படத்தின் தலைப்பு தான். நான் இனிமேல் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அர்த்தம் இல்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அது எனக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்கத் தயராக இருக்கிறேன்.

இந்த படத்தை தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று எனக்கு தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து புதிய படங்களை தயாரிப்பேன்.

படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் சிரமம். தற்போது மக்கள் படம் முழுக்க காமெடி காட்சிகளையே எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் காமெடி காட்சிகள் தனியாக எடுத்து சேர்க்கப்படும்.

இப்போது படத்தோடு வருவதை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது தமிழ் சினிமாவின் பாணி மாறி விட்டது. பேய்க் கதைகளை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றன. அப்படி பார்த்தால் பேய் தான் இப்போது சூப்பர்ஸ்டார்.

எனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக ஆஸ்னாசவேரி நடிப்பதற்கு காரணம், அவர் முதல் படத்தில் திறமையாக நடித்ததுதான்.

இப்போதுநான் ‘பிசி’யாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது டைரக்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இப்போது எல்லாம் ஒரு படம் 2 வாரத்துக்கு மேல் ஓடுவது இல்லை. அப்படி ஓடினால் அது பெரிய வெற்றிப்படம் தான்.

இனிமே இப்படித்தான் படம் வெளியாகும் போது நடிகர் வடிவேலு நடிக்கும் படமும் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் போட்டி எல்லாம் கிடையாது. அவருக்கு என்று ஒரு பாதை இருக்கிறது.

அதில் அவர் சிறப்பாக பயணம் செய்கிறார். எனக்கு என்று ஒரு பாதையில் நான் போய்கொண்டு இருக்கிறேன். விளம்பர படத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் என்றால் பல்வேறு தரச்சான்றிதழ்கள் பெற்ற பின்னர் தான் ஒரு தயாரிப்புக்கு விளம்பரம் எடுக்கப்படுகிறது. பின்னர் அந்த விளம்பரம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் தான் வெளியாகிறது. அப்படி இருக்கும் போது நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விநியோகஸ்தர் குணசேகர் உடன் இருந்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries