நான் நடிக்க தடை விதிப்பதா?: மன்சூர் அலிகான் ஆவேசம்

f11b90ab-7587-48ab-9754-8eec98577c34_S_secvpfநடிகர் மன்சூர் அலிகான் பெப்சிக்கு போட்டியாக டாப்சி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இதில் திரைப்பட தொழிலாளர்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து மன்சூர் அலிகான் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பெப்சி சங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–

டாப்சி அமைப்பை நசுக்குவதற்காக நான் நடித்தால் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்கிறார்கள். மன்சூர் அலிகான் நடிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

பெப்சி தொழிலாளர்களுடன் எனக்கு மோதல் இல்லை. ஆனால் நிர்வாகத்தில் உள்ள சிலரின் தவறுகளால் சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

எனது டாப்சி சங்கத்தில் 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். டான்சர்கள், சண்டைக் கலைஞர்கள் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் நிறைய பேர் சேர்ந்த வண்ணம் உள்ளனர். ஐந்து லட்சம் தர இயலாத கலைஞர்கள் வெறும் இரண்டாயிரம் ரூபாயில் இதில் சேர்கின்றனர்.

தொழில் தெரிந்த நான் அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை தருகிறேன். இது தவறா? இது ஏழை தொழிலாளர்களுக்கான அமைப்பு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கடிதம் தரட்டும் நீதிமன்றத்தில் அவர்களை சந்திக்கிறேன். என்னை அவமானபடுத்த நினைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries