நான் தயாரிக்கும் படங்களில் புது முகங்களுக்கு வாய்ப்பு: சந்தானம்

c28ca71f-402c-413d-a733-9a4f389cb7a4_S_secvpfசந்தானம் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘‘இனிமே இப்படித்தான்’’ படம் வருகிற 12–ந் தேதி வெளியாகிறது. இதையொட்டி கோவை வந்த நடிகர் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘இனிமே இப்படித்தான்’ படத்தை நான் சொந்தமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறேன். நான் காமெடியனாக, கதாநாயகனாக, தயாரிப்பாளராக வந்து உள்ளேன்.

தற்போது ஒரு படம் தயாரித்து அதை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அந்த கஷ்டத்தை இந்த படத்தில் நான் அனுபவித்துள்ளேன். நான் தயாரிக்கும் படங்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்.

நான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அது போன்று இதுவும் எனக்கு அமையும். ஒரு ஹீரோவோடு சேர்ந்து நடித்த உணர்வு ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் போதுதான் எனக்கு ஏற்பட்டது.

காமெடியன் கதாநாயகன் ஆகலாம். ஆனால் படத்தில் நடனம் ஆடும்போது மட்டும் கவனம் தேவை. அது காமெடியாக இருந்து விடக்கூடாது ஆகவே அதற்காக நான் நிறைய பயிற்சி எடுத்து இந்த படத்தில் நடனம் ஆடி உள்ளேன்.

அதிக வசனம் இல்லாத, பேசாமல் காமெடி பண்ணும் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்காக நான் திட்டமிட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries