வியக்க வைக்கும் திறமை கொண்டவர் சிம்பு: கௌதம் மேனன்

55ec5880-3bf2-4c8b-9834-e7c081a04a13_S_secvpf‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா நடிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.

தமிழில் சிம்புவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடித்து வருகிறார்கள். ஆனால் மஞ்சிமா இரண்டு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் சுவாரஸ்யமான விஷயங்களை இயக்குனர் கௌதம் மேனன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதாவது, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படக்காட்சிகளை மிகவும் ஜாலியாக, ஒவ்வொரு நிமிடத்தையும் காதலித்து படமாக்கி வருகிறேன்.

அதிலும் வியக்க வைக்கும் திறமை கொண்ட சிம்புவும், மிகவும் அழகான மஞ்சிமாவும் எங்களுடன் இருக்கிறார்கள். சிம்பு அனைத்து விஷயங்களையும் மிகவும் எளிதாக செய்யக்கூடியவர் என்று பாராட்டு மழை பொழிந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries