மதுஷாலினிக்கு வாய்ப்பு கொடுத்த கமல்

3389c8de-b3b6-4df6-8bdc-176aa6314bfa_S_secvpfபாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் மதுஷாலினி. இப்படத்திற்கு அவருக்கு தமிழிலும் சரி, மற்ற மொழிகளிலும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘டிபார்ட்மெண்ட்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஓரளவுக்கு படவாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மதுஷாலினி, கமல் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் ‘தூங்காவனம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் நாயகியாக ஏற்கெனவே திரிஷா ஒப்பந்தமாகியிருந்தாலும், மதுஷாலினிக்கும் அவருக்கு இணையான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகளில் கடந்த சில நாட்களாக மதுஷாலினி கலந்துகொண்டு நடித்து வருகிறாராம்.

ஏற்கெனவே, கமல், திரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருக்கும் இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online