த்ரிஷா இல்லனா நயன்தாராவுடன் இணைந்த ஆர்யா

7476933c-8146-49f9-884d-5bec64009cf7_S_secvpfஆர்யா தனது படம் மட்டுமல்லாது தனது நண்பர்களுக்காகவும் அவர்களது படங்களில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்து வருபவர். இயக்குனர் ராஜேஷ், சந்தானம், விக்ராந்த் ஆகியோரது படங்களில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

அந்த வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஆர்யா நடித்துக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆர்யாவை ஜி.வி.பிரகாஷ் அழைத்ததன் பேரிலேயே இந்த படத்தில் ஆர்யா நடித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே, நடிகை ப்ரியா ஆனந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். தற்போது ஆர்யாவும் நடித்துள்ளது படத்திற்கு ஒரு பெரிய பலமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயல் ஆனந்தி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries