சம்பளத்துக்கு பதிலாக ருத்ரமாதேவி படத்தில் பங்கு கேட்கும் அனுஷ்கா

7fb99fb6-bf21-41b0-abbf-1643e720343c_S_secvpfஅனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்று சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்கிறார். ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடிக்கிறார். குணசேகர் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அரண்மனை அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் படத்தை எடுத்துள்ளனர். இந்த படம் அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனைபடமாக இருக்கும் என கருதப்படுகிறது.

வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ‘ருத்ரமாதேவி’ படம் ரிலீசானதும் அதன் வசூலில் தனக்கு பங்கு கொடுக்கும்படி அனுஷ்கா நிர்ப்பந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் கோடி கோடியாய் வசூல் குவிக்கும் என அவர் எதிர்பார்க்கிறாராம். எனவே வசூலில் குறிப்பிட்ட தொகையை தனக்கு தர வேண்டும் என்று கூறுகிறாராம். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பளத்துக்கு பதிலாகத்தான் வசூலில் பங்கு கேட்கிறார் என்கின்றனர். இந்தி நடிகர், நடிகைகள்தான் இப்படி படங்களில் பங்கு கேட்பது உண்டு. அதை அனுஷ்காவும் பின்பற்றுகிறார். பங்காக கிடைக்கும் தொகை சம்பளத்தை விட பல மடங்கு இருக்கும் என்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online